Monday, October 25, 2010

யோசிக்க தெரியாதவன்

அந்த மேஜை ரொம்ப வெட்க படுத்து .'
'ஏன்'
'அதுக்கு டிராயர் இல்லையே '


$$$$$$


பாமா : பல் ஆஸ்பத்திரிக்கு எப்படிப் போகணும்.
ராமு : சொத்தையோட போகணும்

$$$$$

உமா : நான் புதுசா ஒரு பாட்டு எழுதினேன்
பாமா : எதை வைத்து?
உமா : பேனாவை வைத்து தான் எழுதினேன்!

$$$$$$$$$$

ரேணு : அவங்க ரெண்டு பேருக்குள்ளே என்ன சண்டை.
பானு : அவங்களுக்குள்ளே ஆயிரம் இருக்கும்.
ரேணு : அப்ப ஆளுக்கு ஐநூறா பிரிச்சுக்க வேண்டியதுதானே!

$$$$$$$$$

கரண் : கழுதைக்குப் பிடித்த ரொட்டி எது?
கிரண் : தெரியலியே?
கரண் : சுவரொட்டி - தான்.
கிரண் : ?????????

$$$$$$$$$$$

ஏன் ஸ்கூட்டரை திருடினே...?"

"டிராபிக் போலீஸ்காரர்தாங்க சீக்கிரம் வண்டிய எடு வண்டிய எடுன்னு
அவசரப்படுத்தினாரு எசமான்..!"

$$$$$$$$$

ஆசிரியர் : உங்க பையன் ஆங்கிலத்தில படு வீக்கா இருக்கான் சார்.

பையனின் தந்தை : தமிழிலே எப்படி இருக்கான்னு சொல்லுங்க, சார்.

ஆசிரியர் : தங்கள் மகன் ஆங்கிலத்தில் மிகவும் வலு விழந்து இருக்கின்றான்,
ஐயா.

$$$$$$$$$$$

மாணவன் 1 ஏணடா தண்ணியிலிருந்து மின்சாரம் எடுக்குறாங்க?

மாணவன் 2 இல்லன்னா குளிக்கும் போது சாக் அடிக்கும் அதனாலதான்

$$$$$$$

பஸ் ரூட்ல பஸ் போகும், ட்ரைன் ரூட்ல ட்ரைன் போகும்! பீட் ரூட்ல என்ன போகும்?


Tuesday, October 19, 2010

பிரபல எழுத்தாளருக்கு பகிரங்கக் கடிதம்

பெருமதிப்பிற்குரிய பிரபல எழுத்தாளர் ஜான் சீனா அவர்களுக்கு,

உங்களுடைய பரம வெறியன் தூக்கநாயக்கன்பாளையம் துரைசாமி எழுதும் கடிதம். பல ஆண்டுகளாக உங்களுடைய எழுத்தை தொடர்ந்து வாசித்தாலும் இதுதான் நான் உங்களுக்கு எழுதும் முதல் வாசகர் கடிதம்..அப்போதாவது இதை நிச்சயம் நீங்கள் உங்களுடைய வலைப்பூவில் வாரந்தோறும் வருகிற மண்ணுசைவம் பதிவில் போட்டு என்னை பிரபலமாக்குவீர்கள் என்ற நம்பிக்கையில் இந்த கடிதத்தை என் ரத்தத்தால் எழுதியுள்ளேன். பி பாஸிட்டிவ் குரூப்.

என்னுடைய மூன்று வயது பையன் உங்களை விடவும் அருமையாக எழுதுகிறான்.ஆனாலும் நான் ஏன் உங்கள் எழுத்தை வாசிக்கிறேன். இப்படி ஒரு கேள்வி பல ஆண்டுகளாக தொடர்ந்து எழுந்தாலும் அதற்கான காரணம் இப்போதுதான் புரிந்தது. நீங்கள் ஒரு மகான்.காந்தி,நேரு,நேதாஜி,விஜயகாந்த்,அர்ஜுன் இவர்களுக்கு பிறகு நம் நாட்டின் மீது அதிக பற்றுக்கொண்ட தேசபக்தி எழுத்து உங்களுடையது. சோராமசாமி,டிராபிக்ராமசாமி,விகேராமசாமிக்கு பிறகு நம் மக்களின் மீது பற்றிகொண்ட எழுத்து உங்களுடையது. நயன்தாரா,ஷகிலா,சிந்து,மரியா,பரவை முனியம்மா மாதிரி கவர்ச்சி கொட்டிய டபுள் எக்ஸ் எழுத்து உங்களுடையது. அதுதான் காரணம்.

உங்கள் வலைப்பூவினை வாசிப்பதற்கு முன்னால் எனக்கு வேலை கிடையாது. சாப்பாட்டுக்கே வழியில்லை.உங்கள் வலைப்பூவில் கி.பி.2009ல் டிசம்பர் மாதம் வெளியான ஒரு பதிவில் நீங்கள் வேலை வெட்டியில்லாமல் மோட்டு வளையை பார்த்தபடி பல ஆண்டுகள் ஓசியிலேயே உடம்பு வளர்த்ததைப் பற்றி விரிவாக எழுதியிருந்தீர்கள். அதைப்படித்து உடம்பு சிலிர்த்து நானும் உங்களைப்போல் கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டில் வெட்டியாகத்தான் இருக்கிறேன். ஆனால் உங்களைப்போலவே ஓசி சோத்துக்கு வழி பண்ணிவிட்டேன். காரணம் நீங்கள் நீங்கள் மட்டும்தான். உங்களால்தான் என் வாழ்க்கையில் மாற்றம் உண்டானது.

நாம் ஏற்கனவே சந்தித்திருக்கிறோம். உங்களுக்கு நினைவிருக்காது. தினமும் மெரீனா பீச்சிலும்,ஸ்பென்சர் பிளாசாவிலும்,கோவிலிலும்,சர்ச்சிலும்,மசூதியிலும் பல நூறு வாசகர்களை சந்திக்கும் உங்களுக்கு என்னை நினைவிருக்காது. நான் ஒரு முறை வில்லிவாக்கம் டாஸ்மாக்கில் உங்களிடம் ஓசி ஊறுகாய் கேட்டிருக்கிறேன். அதைப்பற்றி நீங்கள் கி.பி.2008 மார்ச் ஆறாம்நாள் எழுதிய ஓசி ஊறுகாயும் ஒரு குவாட்டர் கட்டிங்கும் என்கிற பதிவில் நான் ஓசியில் வாங்கிய ஊறுகாய் பாக்கட் குறித்து எழுதியிருந்தாலும் அதை வாங்கிய என்னைப்பற்றி ஒரு வரி கூட எழுதவில்லையே.

நீங்கள் எழுதியிருந்த பக்கத்தூட்டு ஆயா இடியாப்பத்துக்கு பாயா சிறுகதையை படித்து அழுதுவிட்டேன்.அதிலும் அந்த பாயா அந்த ஆயாவிற்கு கிளைமாக்ஸில் கிடைக்காமல் போவது மிகமிக டச்சிங்! நான் சுஜாதாவிடம் பார்த்த அந்த துள்ளலும் எள்ளலும் நக்கலும் உணர்ச்சியும் உங்களிடம் மட்டும்தான் இருக்கிறது. டேய்.. நீ எழுத்தாளன்டா.. சாரி என்னை மன்னித்துவிடுங்கள் ஒரு எமோசனில் டா போட்டுவிட்டேன். அந்த கதையை ஏன் இப்படி முடித்தீர்கள். பாவம் அந்த ஆயா. உங்களை சரிதான் போயா என்று உரிமையோடு திட்ட வேண்டும் போல இருந்தாலும்,உங்களுடைய எழுத்தில் சப்பணமிட்டு அமர்ந்திக்கும் ஷகிலாவும் ஜோதிகாவும் என்னை தடுத்து நிறுத்திவிட்டனர். டேய் நீ உலகமகா எழுத்தாளன்டா!டே..

நீங்கள் ஏன் நாவல் எழுதக்கூடாது. உங்களுக்கு அதற்கான சகல தகுதிகளும் இருக்கிறது. தயவுசெய்து நீங்கள் அடுத்த ஆறுமாதத்திற்குள் நாவல் எழுதாவிட்டால் வீடு தேடிவந்து உங்களை நடுரோட்டில் போட்டு நாயடிப்பதை போல அடித்துவிடுவேன் என்பதையும் சொல்லிக்கொள்கிறேன். தயவு செய்து எழுதுங்கள்.ஏன் கடந்த சில நாட்களாக எதுவுமே எழுதுவதில்லை. உங்கள் வலைப்பூவை ஒவ்வொரு மைக்ரோ விநாடிக்கும் ஒரு முறை ரிப்ரஷ் செய்து செய்து என்னுடைய விரல் இரண்டு சென்டிமீட்டர் தேய்ந்துவிட்டது.
ஆனாலும் உங்களுக்கு மட்டும் எப்படி ஒரு நாளைக்கு பத்தாயிரம் ஹிட்ஸ் கிடைக்கிறது. மற்றபடி உங்கள் எழுத்தை நேசிக்கும் நூறு கோடி தமிழர்களுக்காகவும் ஐநூறு கோடி இந்தியர்களுக்காகவும் பல கோடி மனிதர்களுக்காகவும் தயவு பண்ணி எழுதுங்க. அதேபோல எப்படி வலைப்பூ ஒன்றை ஆரம்பிப்பது என்று சொல்லிக்கொடுத்தால் உங்களைப்போலவே நானும் மிகப்பெரிய எழுத்தாளன் ஆவேன்.

நீங்கள் கொடுத்த முப்பது ரூபாவுக்கு இவ்வளவுதான் முடியும். தொகையை அதிகமாக்கினால் இன்னும் நிறைய கூவுவேன் என்று உறுதியளிக்கிறேன்.

நன்றி

துரைசாமி

வாழைப்பழம் - ஆப்பிள்

Print E-mail

http://1.bp.blogspot.com/_cSMGB9hjXFA/SCIktLN0OwI/AAAAAAAABRQ/JPNvmNtGN2g/s400/banana1.jpgஆப்பிள் அழுது கொண்டு இருக்கிறது


வாழைப்பழம்: ஏன் அழுகிறாய்?


ஆப்பிள்: எல்லாரும் என்னை கட் பண்ணி சாப்பிடுறாங்க!!


வாழைப்பழம்: நீ பரவாயில்லை. என்னை எல்லாரும் என்னோட டிரஸ்ஸ அவிழ்த்துவிட்டு சாப்பிடுறாங்க!!

சிரிப்பு

அது ரஷ்யாவும், சீனாவும் அரசியல் ரீதியாக பகை பாராட்டியிருந்த நேரம். இரண்டு நாடுகளும் ஒன்றை ஒன்று ராணுவ பலத்தால் அழித்து விடுவதாக சவாலிட்ட சமயம். க்ரெம்லின் மாளிகைக்கு ஒரு பெரிய பார்சல் வருகிறது. ரஷ்ய அதிபர் பிரெஸ்னேவ் அதைத் திறக்கிறார். ஒரு பை முழுவதம் பீன்ஸ் விதைகள்.

அதோடு சீனாவின் மாவோவிடமிருந்து ஒரு கடிதம். "இப்படித்தான் படை படையாக உங்களை வந்து தாக்குவோம்" என்று கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது.

பிரெஸ்னேவ் உடனே பதிலுக்கு ஒரு பெரிய பையில் கோதுமை மாவை பார்சலில் சீனாவிற்கு அனுப்புகிறார். அதனுடன் இணைப்பாக ஒரு கடிதம். "இப்படித்தான் உங்கள் படையைப் பொடிப் பொடியாக்கி விடுவோம்”

*****

ஒரு அமெரிக்க ராணுவப் பயிற்சி முகாம். விமானப்படை வீரர்கள் விமானத்திலிருந்து பாரசூட் மூலம் கீழே குதிக்க வேண்டும்.

ஒரு வீரன் பதற்றத்துடன் சொன்னான். "தலைவரே, எனது பாரசூட் திறக்க மாட்டேன் என்கிறது"

தலைவர் சொன்னார். " கவலைப்படாதே! இது வெறும் பயிற்சிதானே!" கிழக்கு ஜெர்மனி வீரர்கள் ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். பல ஆண்டுகள் பல நாடுகளுடன் போரிட்டு அவர்களுக்கு யார் நண்பர்கள், யார் விரோதிகள் என்பதிலேயே குழப்பம் இருந்தது. கமாண்டர் ஒரு வீரனைக் கூப்பிட்டு, "ஒரு அமெரிக்கன் ஒரு ரஷ்யன் இருவரைப் பார்த்தால் முதலில் யாரைச் சுடுவாய்?" என்று கேட்டார்.

இப்போது அமெரிக்கா விரோதியா, இல்லை.. ரஷ்யா விரோதியா எனத் தெரியாமல் குழப்பத்தில் இருந்த அந்த வீரன் "ரஷ்யனை" என்றான்.

கமாண்டர், " நீ ஒன்றுமே தெரியாத முட்டாளாயிருக்கிறாயே! நான் உனது இடத்தில் இருந்தால் அமெரிக்கனைத்தான் கொல்வேன்" என்றார்.

அந்த வீரன், "அப்படியே இருந்தாலும் நான் கொல்வதற்கு அந்த ரஷ்ய வீரன் இருப்பான்.. இல்லையா?" என்று அப்பாவித்தனமாகச் சொன்னான்.

*****

ஒரு முறை ஹங்கேரிய ஜனாதிபதி ஜனோஸ் கத்தாரும் ரஷ்ய அதிபர் பிரெஸ்னேவும் தத்தமது நாட்டு வீரர்கள்தான் சிறந்தவர்கள் என்று ஒருவருக்கொருவர் விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

ரஷ்ய அதிபர், "சோவியத் வீரர்கள்தான் சிறந்தவர்கள். சோவியத் வீரன் முதலில் சிந்திக்கிறான், பிறகு செயல்படுகிறான்" என்று கூறினார்.

ஹங்கேரி அதிபர், "இல்லை.. இல்லை. எங்கள் நாட்டு வீரர்கள்தான் சிறந்தவர்கள். எங்கள் வீரர்கள் முதலில் செயல்படுவார்கள், பிறகுதான் சிந்திப்பார்கள்" எனக் கூறினார்.

அவர்கள் இருவரும் இப்படியே விவாதித்துக் கொண்டிருக்க, இரண்டு நாட்டு வீரர்களையும் அழைத்து சோதித்துப் பார்த்துவிடுவது எனப் பந்தயம் கட்டினார்கள்.

பிரஸ்னேவ் தனது வீரனை அழைத்து, "வீரனே, இதோ இங்கிருப்பது ஹங்கேரிய ஜனாதிபதி ஜனோஸ் கத்தார். அவரை சென்று தாக்கு" என்றார். சோவியத் வீரன் சற்றே யோசித்து, "இல்லை, என்னால் நம் நாட்டு நண்பரைத் தாக்க முடியாது" என்றான். ஹங்கேரிய ஜனாதிபதி தனது வீரனிடம் "இதோ, இங்கிருப்பது சோவியத் அதிபர் ப்ரெஸ்னேவ். அவரை உடனே சென்று பலமாகத் தாக்கு" என்றார். அந்த வீரனும் சற்றும் யோசிக்காமல் உடனே பிரஸ்னேவை பலமாகத் தாக்கியதில் அவர் சற்று தள்ளிக் கீழே விழுந்தார்.

அந்த வீரன் கதவு வரை சென்று ஏதோ சிந்திக்கத் தொடங்கினான். தான் பந்தயத்தில் வெற்றி பெற்றோம் என்ற களிப்பில் இருந்த கத்தார், அந்த வீரன் போகாமல் இருப்பதைப் பார்த்து, "ஏன் நிற்கிறாய் போகாமல்? என்ன சிந்தனை உனக்கு? என்னைப் பந்தயத்தில் ஜெயிக்க விடமாட்டாய் போலிருக்கிறதே" என்றார் எரிச்சலுடன்.

அந்த வீரன் சொன்னான், "இல்லை.. தாக்கியது போதுமா அல்லது உதைக்கவும் வேண்டுமா" என்றுதான் யோசிக்கிறேன் என்றான்.

*****
ஒரு ரஷ்ய உளவு விமானம் அலாஸ்கா அருகில் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதிலுள்ள விமான ஓட்டியை அமெரிக்க ராணுவத்தினர் பிடித்து விசாரித்தனர். விசாரணை செய்த அமெரிக்க அதிகாரி ரஷ்ய விமான ஓட்டியிடம், ரஷ்யப் போர் விமானம் மிக் 29ஐப் பற்றி விளக்கிக் கூறுமாறு கேட்டார். எத்தனை முறை திரும்பத் திரும்பக் கேட்டாலும் அந்த விமான ஓட்டி தனக்குத் தெரியாது என்றே பதிலளித்தான். அடித்து உதைத்துக் கேட்டும் பிரயோசனமில்லை. அமெரிக்கர்களே களைத்துப்போய் அந்த விமான ஓட்டியை ரஷ்யாவிற்கே திருப்பி அனுப்பிவிட்டார்கள்.

ரஷ்யா சென்ற அவன் தனது சக விமான ஓட்டிகளிடம் சொன்னான். "மிக் 29ஐப் பற்றி நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். அது தெரியாமல் அமெரிக்கப் படைகளிடம் பிடிபட்டால் நன்றாக உதை வாங்க வேண்டி வரும். எனக்கு அது பற்றி தெரியாததால் என்னை நொறுக்கியே விட்டார்கள்

சர்தார்ஜி ஜோக்ஸ்

ஒரு நாள் தன்னுடைய காரை எடுக்க வந்தபோது, "Parking fine" என்று எழுதியிருந்ததைக் கண்டார் சர்தார்ஜி.
மிகவும் சந்தோஷமடைந்த சர்தார்ஜி "பாராட்டுக்கு நன்றி" என்று எழுதி பக்கத்தில் இருந்த கம்பத்தில் ஒட்டினார்.

*****

ஓரு முறை சர்தார்ஜி மற்றும் அவருடைய நண்பர் "Jurassic Park" படம் பார்க்கச் சென்றனர். படம் ஆரம்பித்த பிறகு சர்தார்ஜி சீட்டின் அடியில் மறைந்து கொண்டார்.
நண்பர் : இது சினிமா.. இதற்கு போய் பயப்படலாமா?
சர்தார்ஜி : அது எனக்கு தெரியும். ஆனா அதுக்கு தெரியாதே.

*****

சர்தார்ஜி : நேத்து நான் டிரெய்ன்ல TTR-ஐ ஏமாத்திட்டேன் தெரியுமா?
நண்பர் : எப்படி ?
சர்தார்ஜி : டிக்கெட் வாங்கினேன், ஆனா நான் பிரயாணமே செய்யலயே!

*****

சர்தார்ஜி இரண்டு தாள்களை சரிபார்த்துக்கொண்டிருந்தார். அங்கு வந்த நண்பர் சர்தார்ஜியிடம் கேட்டார்.
நண்பர் : என்ன செஞ்சுக்கிட்டு இருக்கே?
சர்தார்ஜி : பிரதி எடுத்தேன். எழுத்துப்பிழை இருக்கான்னு சரி பார்த்துட்டுருக்கேன்.